கிராம சபை கூட்டம்

04 ஜூலை 2020

2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு மானாம்பதி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் தனி அலுவலர் தலைமையிலும் பற்றாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையிலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொது மக்களும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் மற்றும் பல அலுவலர்களும் கலந்துகொண்டு இயற்றப்பட்ட தீர்மான நடவடிக்கைகள்.

தீர்மானங்கள்

 1. 01.10.2019 முதல் 31.12.2019 வரை பொது நிதி செலவனம்.
 2. மழை நீர் சேகரிப்பை பற்றி விழிப்புணர்வு.
 3. குடிமராமத்து இயக்கம்.
 4. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு.
 5. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்.
 6. பணிகளின் விவரம்.
 7. மக்கள் திட்டமிடல் இயக்கம்.
 8. வன்னியர் தெரு கழிவு நீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைத்தல்.
 9. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை தடை செய்ய ஒப்புதல்.
 10. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திலிருந்து நீக்கப்படுவோரின் பட்டியல்.
 11. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் 2020-21 பணிகளின் விவரம்.
 12. ஜன சக்தி அபியான் திட்டத்தின் மூலம் ஏரி, குளம் சீரமைத்தல்.
 13. முழு சுகாதார திட்டம் - திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக மாற்றுதல்.
 14. தீன தயாள் உபாத்யாயா கிராமின் யோஜனா திறன் மேம்பாட்டு திட்டத்தின் விவரம்.
 15. பிரதம மந்திரி சுராக்ஷ பீமா யோஜனா காப்பீடு திட்டத்தின் விவரம்
 16. 2020-21ஆம் நிதியாண்டின் உத்தேச மதிப்பீடு மற்றும் பணிகளின் விவரம்.
 17. தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
 18. அம்மா இருசக்கர வாகன திட்ட விவரம்
 19. பெண் குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
 20. பொது விநியோக திட்டம் - சமூக தணிக்கை.
 21. தேசிய வாக்காளர் தினம்.
 22. மகளிர் சுய உதவி குழுக்கள் - இருப்பு விவரம்.
 23. பசுமை வீடு வழங்கும் திட்டம்
 24. குழந்தை தொழிலாளர்களை பள்ளிக்கு அனுப்புதல்.
 25. ஊராட்சி தொடக்கப்பள்ளி எதிரே உள்ள கால்வாய்
 26. மேல் தெருவில் சாலை சீரமைத்தல்
 27. சோழியம்மன் கோவில் அருகே மேடை அமைத்தல்.
 28. சாலையோர ஆக்கிரமிப்புகளை நீக்குதல்.
 29. சன்னதி தெருவில் கால்வாய் மூடி அமைத்தல்.
 30. புதிய பட்டாவிற்கு ஊராட்சி அனுமதி
 31. நிறைவேற்றப்படாமல் இருக்கும் தீர்மானங்களை நிறைவேற்றுதல்.
 32. மாந்தோப்பில் மின் இணைப்பை துண்டித்தல்.
 33. புத்தேரி தெருவில் புதிய சாலை
 34. புத்தேரி தெருவில் புதிய கை பம்பு.
 35. கழிவுநீர் கால்வாய் தூர் வாருதல்.
 36. புத்தேரி தெருவில் பைப் லைன் அமைத்தல்.
 37. வன்னியர் தெருவில் கை பம்பு சீரமைத்தல்.
 38. ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள கை-பம்பு.
 39. ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக
 40. சன்னதி தெரு கால்வாயை மூடுதல்.