புகார் #12

சிறுவர் பூங்காவில் சிதைக்கப்பட்ட நடைபாதை

#கட்டமைப்பு

சில தினங்களுக்கு முன் சோழியம்மன் கோவில் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் ஜல்லி கொட்டி வைக்க பட்டது.

1) பூங்காவின் மையத்தில் நிறைய இடம் இருந்தும் நடைபாதையை மறிக்கும் விதமாக ஜல்லி கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.

2) நடைபாதையின் மேல் வண்டி ஏறியதால் நடைபாதையின் மைய பகுதி பூமியில் சிதைந்து மேடும் பள்ளமுமாக மாறியுள்ளது. இது நடைபயிற்சி மற்றும் ஜாகிங் மேற்கொள்பவற்கு சிரமத்தை கொடுக்கிறது. கால் இடறி விழுவதற்கான வாய்ப்புள்ளது.

மேலே கூறப்பட்ட இவ்விரண்டையும் சரி செய்யும்படியும் இனி வரும் காலங்களில் இது போன்று நடவாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.